"கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடை இல்லாத நகரமாக கோவை உள்ளது"

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை என்று மின்வாரிய மண்டல முதன்மை பொறியாளர் கூறியுள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை என்று மின்வாரிய மண்டல முதன்மை பொறியாளர் கூறியுள்ளார். 



தமிழ்நாடு மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை மண்டல முதன்மை பொறியாளர் ஹல்துரை பேசுகையில்," கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை. 



மாவட்டத்தில் 17 புதிய துணை மின் நிலையங்களை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்து வருகிறது. மின்சார வசதியே இல்லாத பூமனூர் மற்றும் சேம்புக்கரை என்ற இரண்டு கிராமங்களுக்கு தற்போது மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 2019-க்குள் மின்சார கசிவினை 13.5 சதவீதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். 

மின்சார சிக்கனம் என்பதை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்தால் அதிக அளவில் மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும். " என்றார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....